test

Thursday, January 5, 2012

இந்தியாவை ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம் - பகுதி 3

(சுவனபிரியன் இணையததளத்தில் வெளிவந்த இந்த கட்டுரை  இந்த தொடரின் தொடர்புடையதாக  இருந்ததால் இங்கு பதிகிறேன் )
இந்துத்துவ மற்றும் இஸ்ரேலிய பயங்கரவாதிகளின்  கள்ள கூட்டுக்கள்இஸ்ரேல் நாட்டின் யூத மத குருக்களின் தலைவர் என்று அழைக்கப்படக் கூடிய யோனா மெட்ஸ்கர் (Israels chief robbyYona Metskar) என்பவருக்கும் இந்து தர்ம ஆச்சாரிய சபை தலைவர் சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களுக்கும் சில காலம் முன்பு ஏற்பட்ட ஒப்பந்தத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தம் டெல்லியில் உள்ள ஓபராயில் வைத்து 2007 பிப்ரவரி 7 ஆம் நாள் நடைபெற்றது. இதற்கு முதல் நாள்தான் ராம ஜென்ம பூமி புகழ் எல்.கே.அத்வானியின் வீட்டில் ஒரு ரகசிய கூட்டம் நடைபெற்றது. சில பத்திரிக்கைகள் அன்று யூத மத தலைவர்கள் பலர் டெல்லி வந்திருந்ததாகவும் அவர்களுக்கும் இங்குள்ள இந்துத்வ தலைவர்களுக்கும் இடையே ஒருநாள் ரகசிய சந்திப்பு ஏற்பட்டதாகவும் கூறின.

ஆதாரம்
ஹிந்துஸ்தான் எக்ஸ்பிரஸ்
பிப்ரவரி 07.

இஸ்ரேல் குஜராத் உறவுகள்!

குஜராத்தில் நவராத்திரி இரவுகளில் மக்களை மகிழ்வூட்ட இஸ்ரேலுடைய நடனக் குழு தருவிக்கப்பட்டிருந்தது. நடனக் குழுவை குஜராத் மாநில அரசின் சுற்றுலா மேம்பாட்டுத் துறைதான் தருவித்தது. இஸ்ரேல் நடனக்காரிகள் மிகவும் சிக்கனமாகவே ஆடை அணிந்திருந்தனர். ஆடியும் காட்டினர். 24.09.2006 அன்று அவர்கள் ஆடிக்காட்டியதை முதலமைச்சரே நேரில் கண்டு மகிழ்ந்தார்.

இஸ்ரேலிய மங்கையர் ஆபாசமாக ஆடை அணிந்திருந்ததால் மக்கள் வெகுண்டெழுந்து அவர்களை உடனே வெளியேற்றிட வேண்டும் என்றனர். இஸ்ரேலின் நடனக்குழு தலைவர் நாங்கள் வெளியேறிட இயலாது எனக் கூறினார். தங்கள் நாட்டில் மங்கையர் அப்படித்தான் ஆடை அணிவார்கள். அது இஸ்ரேல் நாட்டுப்புற நடனம். அது அப்படித்தான் என்று கூறி விட்டார். அத்தோடு மும்பையிலுள்ள இஸ்ரேலியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு புகார் கூறினார்.

மும்பையிலுள்ள இஸ்ரேலிய தொடர்பாளர் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியைத் தொடர்பு கொண்டார். மோடி குஜராத் சுற்றுலாத் துறை செயலாளர் ஆர்.எம்.பட்டேல் அவர்களை இஸ்ரேலிய நடனக் குழுவிடம் மன்னிப்புக் கேட்கச் சொன்னார். மன்னிப்பும் கேட்கப்பட்டது. அத்தோடு நடனங்கள் சற்றும் ஆபாசம் குறைவில்லாமல் நடைபெற ஆவணச் செய்யப்பட்டது.

'முதலமைச்சர் நரேந்திர மோடி உரிய நேரத்தில் தலையிட்டதால் இஸ்ரேலுக்கும் குஜராத்திற்கும் இடையேயுள்ள உறவுகள் உடைந்து போகாமல் பாதுகாக்கப்பட்டன.'

-ஆதாரம்
தி ஹிந்து 29-06-2006

இதை இங்கு குறிப்பிட காரணம் மோடிக்கும் இஸ்ரேலியர்களுக்கும் எந்த அளவுக்கு நெருக்கம் உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்காகவே!

இந்த பதிவின் மூலம் படிப்பவர்களுக்கு என்ன சொல்ல வருகிறேன் என்பதை படிப்பவர்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.

எனது தாய்நாடு இந்தியாவை இந்த சூழ்ச்சிக்காரர்களிடமிருந்து அந்த எல்லாம் வல்ல இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்.

இதற்கு வந்த ஒரு பின்னூட்டம்

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் இகத்நிரீடன்(22), மோர்ட்சரீலூஷ்(25) அவர்கள் இருவரும் இரண்டு நாட்களுக்கு முன்பு கோவா வந்தனர். அங்கிருந்து ஜெய்ப்பூர் செல்ல நேற்று கோவா விமான நிலையம் வந்தனர். அவர்களை போலீஸார் சோதனையிட்டபோது அவர்களிடம் 5 துப்பாக்கி குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களை கோவா போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

-தினகரன் 27.02.2007

இஸ்ரேல் மற்றும் நேபாளிகளின் துணையோடு இந்தியாவை இந்து ராஜ்யமாக மாற்றத்தான் சங்பரிவார் தீவிரவாதி பிகேட் வெடிகுணடு தாக்குதலை நடத்தியதாக தீவிரவாத தடுப்புப் படையின் அறிக்கை கூறுகிறது.

தயானந்த பாண்டேயிடம் பறிமுதல் செய்த லேப்டாப்பில் சங்பரிவார் இஸ்ரேலுடன் தொடர்பு கொண்ட போன் நம்பர்கள், தொலைபேசி உரையாடல்கள், வீடியோ காட்சிகள் எல்லாம் இருப்பதாக 4000 பக்கங்கள் கொண்ட ஏ.டி.எஸ்ஸின் அறிக்கை கூறுகிறது.

இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவில் சங்பரிவாரின் ஒரு அலுவலகம் திறக்கவும், இந்தியாவை இந்து ராஜ்ஜியமாக மாற்ற அரசியல் ஆதரவு, மற்றும் ஐ.நா வின் ஒத்துழைப்பு போன்றவற்றை தாங்கள் இஸ்ரேலிடம் கேட்டுள்ளதாகவும் பல அதிர்ச்சி தரும் தகவல்களை லேப்டாப்பிலிருந்து ஆதாரமாக காட்டியுள்ளது ஏ.டி.எஸ். இவை அனைத்து விபரங்களையும் புரோகித் சங்பரிவாருக்கு விளக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது.

இது சம்பந்தமாக இஸ்ரேலுக்கு சங் பரிவாரை சேர்ந்த ஒருவர் போய் வந்ததாகவும் இவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் இஸ்ரேல் ஏற்றுக் கொண்டதாகவும் புரோகித் இந்த லேப்டாப்பில் விவரிக்கிறார். முழு அறிக்கையும் வெளி வந்தால்தான் பலரின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வரும்.

செய்திகள் ஆதாரம்
உணர்வு 18-01-2009


இதை இங்கே வெளியிட காரணம் . மேற்கண்ட  செய்திகள் இந்தியாவில் இஸ்ரேலியர்களின் பயங்கரவாத செயல்கள் ஆழ ஊடுருவி இருப்பதை காட்டுகிறது _ (சமுதாய அரங்கம் )

No comments:

Post a Comment