test

Wednesday, December 28, 2011

உம்மத்தின் பிளவும் காலனித்துவ சக்திகளின் ஆதிக்கமும்


உண்மையில் முஸ்லிம்கள் தமக்குள்ளே யுத்தம் செய்து கொள்வதன் மிகப்பாரது}ரமான அடுத்த விளைவு காலனித்துவ குப்பார்கள் எம்மீது தமது இரும்புக்கரத்தை மென்மேலும் பிரயோகிப்பதற்கு வழிவிடுவதாகும். இது மிகவும் ஆபத்தான நிலையாகும். ஏனெனில் அமெரிக்கர்களும், ஐரோப்பியரும் முஸ்லிம் உம்மத்தின் பலத்தை
குறைவாக எடைபோடவில்லை. ஐரோப்பாவின் ஒரு பாரிய பகுதியைக் கூட (அந்தலு}சியா - இன்றைய ஸ்பெய்ன் மற்றும் போர்த்துக்கல் உட்பட்ட பகுதி) முஸ்லிம் உம்மத் கிலாபத்தின் கீழ் பல நு}ற்றாண்டுகளாக ஆட்சி செய்தது என்பதையும், முஸ்லிம் உம்மத்தை ஓர் கட்டமைக்கப்பட்ட உம்மத்தாக யுத்தத்தில் சந்திப்பது மிகவும் ஆபத்தானது என்பதையும் அவர்கள் இன்னும் மறக்கவில்லை. எனவே அவர்கள் முஸ்லிம் உம்மத்தை எவ்வாறெல்லாம் பலகீனப்படுத்த முடியுமோ அத்தகைய அனைத்து முயற்சிகளையும் எடுப்பார்கள். எம்மை மென்மேலும் பிளவுபடுத்த முனைவார்கள். இது குறித்து ரஸ}ல்(ஸல்) கூறிய கீழ்வரும் ஹதீஸ் ஓர்; முன்னறிவிப்பாக அமைந்துள்ளது.



“எவ்வாறு ஒரு பெரிய உணவுப்பாத்திரத்தை நோக்கி மக்கள் சூழ்ந்து கொள்வார்களோ, அதேபோல உங்களை நோக்கி பல தேசங்கள் சூழ்ந்துகொள்ளும். “ அப்பொழுது நாங்கள் சிறிய எண்ணிக்கையில் இருப்போம் என்பதாலா அவ்வாறு ஏற்படும்” என ஒருவர் கேட்டபோது, இல்லை, அப்பொழுது உங்களுடைய எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும், எனினும் நீங்கள் வெள்ளத்தில் உருவாகும் நுரைகளைப்போலிருப்பீர்கள்.” (அபுதாவூத்)



எனவே நிராகரிப்பாளர்களின் நாடுகள் எமது பிளவுகளை வலுப்படுத்தி எம்மை ஆதிக்கம் செலுத்த முனைவார்கள் என்பதையும், இதனையே காலணித்துவ தசாப்த்தங்களில் அவர்கள் நேரடியாக மேற்கொண்டார்கள் என்பதையும் நாம் மறந்து விடலாகாது. காலனித்துவ நாடுகள் எம்மீது முதலாளித்துவம் என்ற குப்ர் கட்டமைப்பை திணித்து அவர்களின் அரசியற் கைதிகளாக வைத்துக்கொள்ள முனைந்தார்கள். இதன்மூலம் முஸ்லிம்களை அடிமைப்படுத்தி எமது வளங்களை அளவுகணக்கின்றி சுரண்டினார்கள். “ பிளவுபடுத்துதலும், ஆக்கிரமித்தலும்” என்ற இந்த யுக்தியை டி.ஈ. லோரன்ஸ் (லோரன்ஸ் ஒப் அரேபியா) பின்வருமாறு கூறுகிறான். “அவரது அரசியல் மாற்றம் ஓர் வன்முறையான அரசியல் மாற்றமாக உருவெடுக்க செய்துவிட்டால் இஸ்லாம் என்ற அந்த சக்தியின் மீதான எமது அச்சத்தை அழித்துவிடலாம். பிரிப்பதன் மூலம் இஸ்லாத்தை அதன் இதயத்திலேயே அதற்கு எதிராகவே திருப்பிவிடலாம். பின்னர் துருக்கியில் ஒரு கலீபா இருந்து, அரேபியாவில் ஒரு கலீபா இருந்து மதச்சண்டை உருவாகும். பின்னர் இஸ்லாம் ஒரு அச்சுறுத்தலான ஒன்றாக இருக்காது”. இந்த யுக்தியை பின்பற்றியே சைக் - பிக்கட் ஒப்பந்தத்தின் மூலம் முஸ்லிம்களின் பூமி பிரித்தானியாவுக்கும், பிரான்ஸிற்குமிடையே பங்கு போடப்பட்டது. இந்த ஒப்பந்தமும், ஏனைய ஐரோப்பிய சூழ்ச்சித்திட்டங்களுமே ஒரே கிலாபத்தின் கீழ் இணைந்திருந்த முஸ்லிம் தேசம் இன்று ஐம்பதுக்குமேற்பட்ட தேசங்களாக பிரிந்து முஸ்லிம்கள் தமக்குள்ளேயே மோதிக்கொள்ளும் அவல நிலையை தோற்றிவித்துள்ளது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஐரோப்பியர்களின் வழித்தடத்ததை பின்பற்றி அதற்கு தலைமைப்பொறுப்பை ஏற்று இன்று ஐக்கிய அமெரிக்கர் தொடர்ந்து வருகிறது. ஐரோப்பியர்கள் முஸ்லிம்களை பிளவுபடுத்தி எமது தேசத்தை தாம் விரும்பியவாறு பிரித்து, கூறுபோட்டு வரைந்தெடுத்த தேசப்படத்தை அமெரிக்கா திருப்த்தியுடன் பார்க்கவில்லை. மென்மேலும் அத்தேசங்களை கூறுபோட்டு தனது வேட்டைக்கேற்ற ஒரு புதிய தேச வரைபடத்தை வரைவதற்கு முஸ்லிம் தேசத்திற்குள் கால்பதித்து நிற்கிறது. முஸ்லிம் தேசங்களை மேன்மேலும் பிரிக்க நினைக்கும் அமெரிக்காவின் திட்டம் அமெரிக்க இராணுவ துருப்புக்களின் சஞ்சிகையொன்றில் 2006ம் ஆண்டு வெளிவந்திருந்தது. இத்திட்டத்தில் ஈராக், துருக்கி, பாக்கிஸ்தான், சவூதி அரேபியா உட்பட மேலும் பல முஸ்லிம் நாடுகளை மென்மேலும் பலகீனமான சிற்சிறு நாடுகளாக பிளவுபடுத்தும் சூட்சுமை அடங்கியிருந்தது. இந்தத்திட்டத்தின் அறுவடையையே ஈராக்கிலும், தற்போது பாக்கிஸ்தானிலும் நாம் கண்டு வருகிறோம். எனவே ஓர் உம்மத் என்ற கோட்பாட்டை இவர்கள் ஒரு போதும் அனுமதிக்க போவதில்லை. ஓர் உம்மத் என்ற கோட்பாடுடையவர்களை “உம்மைடிஸ்” என்று அழைக்கும் “ராண்ட்” என்ற அமெரிக்கச் சிந்தனைத் தளமொன்று ‘பிளவுபடுத்தி ஆக்கிரமிக்கும் வியூகம்’ என்ற தனது கட்டுரையில் எத்தகைய வெட்கமுமற்று.“ முஸ்லிம்களின் அடிப்படைவாதிகளுக்கு எதிராக பழமைவாதிகளுக்கு ஆதரவு அளியுங்கள். பழமைவாதிகளுக்கும், அடிப்படைவாதிகளுக்குமிடையில் கூட்டிணைவு ஏற்படுவதை மட்டந்தட்டுங்கள்” என்று தெரிவித்திருந்தது.



இவ்வாறு குப்பார்கள் தமது குறிக்கோளில் தெளிவுடன் வெளிப்படையாகவே எம்முடன் மோதிவரும் நிலையில் நாம் எமக்குள்ளேயே போரிட்டுக்கொண்டு அவர்கள் விரித்த வலையில் அதுவும் அவர்கள் இங்கே வலையை விரித்து வைத்துள்ளோம் என வெளிப்படையாகவே தெரிவிக்கின்ற பொழுதும்கூட நாம் அல்லாஹ்(சுபு) மாறு செய்த நிலையில் அதற்குள் சென்று அகப்பட்டுக்கொள்வோமானால் எம்மை எப்படி வர்ணிப்பது.



எனவே கிலாபத்தை நிலைநாட்டுவதன் மூலமாக முஸ்லிம்களை முரண்பாடுகளிலிருந்து பாதுகாத்து அவற்றை ஷாPஆவின் அடிப்படையில் தீர்த்து வைத்து எதிரிகளின் சவால்களுக்கு தக்க பதிலடி கொடுக்கக்கூடிய ஒரு நீதியான ஆட்சியாளரை அல்லாஹ்(சுபு) எமக்கு நல்குவானாக!



“நிச்சமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிக்க கண்ணியமிக்கவர் உங்களில் மிகவும் பயபக்தியுடைவர்தான். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் நன்கறிந்தவன். (யாவரையும்) நன்குணர்பவன்.”(49:13)



warmcall.blogspot.com

No comments:

Post a Comment