test

Thursday, December 15, 2011

இந்தியாவை ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம் பகுதி - 1(மீள் பதிவு)


                                                                                                                             - அதிரை இக்பால் 

  ( இந்த கட்டுரையை தொடர்ச்சியாக பல ஆதாரங்களுடன் எழுத எண்ணி இருந்தேன் . சில காரணங்களால் என்னால் எழுத முடியாமல் போனது . இன்ஷா அல்லாஹ் மீண்டும் இதனை தொடரலாம் என எண்ணி உள்ளேன் . எனவே இந்த மீள்பதிவுடன் இதை ஆரம்பிக்கிறேன் . இதில் உள்ள  அனைத்து தகவல்களும் ஆங்கில , தமிழ் , இஸ்லாமிய இதழ்களிலிருந்து எடுக்கப்பட்டது என்பதனையும் இங்கே தெரிவித்து கொள்கிறேன் . இதில் எந்த ஒரு கற்பனையான தகவல்களும் இல்லை  ஆங்காங்கே சிதறிக்கிடந்த செய்திகளை தொகுப்பாக தருகிறேன் அவ்வளவுதான் )

                     இந்தியாவை ஆக்கிரமிக்க இஸ்ரேல் தயாராகி வருவதாக தகவல்கள் மெல்ல தற்போது வெளியாகி வருகின்றன . ஜான் காமின்ஷி என்பவர் இதனை பல ஆய்வுகளின் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் .யூதர்கள் மணிப்பூர் , நாகலாந்து மிசோரம் , ஆகிய இந்திய மாநிலங்களை குறிவைத்து இயங்கி வருகிறார்கள்  அதற்க்கு ஒரு அமைப்பையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் .      அதன் பெயர் ஜீவிஷ் அவுட்ரீச் ( jewish outreach யூதர்கள் வெளியே தங்களது ஆதிக்கத்தை நிலை நாட்டுதல் ) 
   
                   " இஸ்ரவேலர்களுக்கு மேற்கே ஒரு ஜெருசலமும் கிழக்கே ஒரு ஜெருசலமும் அமையும்" என பழைய ஏற்பாட்டில் வாக்களிக்கப்பட்டிருப்பதாக யூதர்கள் வாதிடுகின்றனர் .(the week 12 sep 2004 )

                  அதன் படி காணாமல் போன பத்து யூத இனங்களில் சில இனங்கள் மேற்சொல்லப்பட்ட பகுதிளில்தான் வாழ்வதாக அவர்கள் வாதிடுகின்றனர் .அது மட்டுமின்றி திபெத் , பங்களாதேஷின் ஒரு பகுதி , திபெத்திற்கும் இந்தியாவிற்கும் இடையேயுள்ள எல்லையோரம் ஆகிய பகுதிகளிலும் காணாமல் போன யூத இனங்கள் வாழ்வதாக அவர்கள் கருதுகின்றனர் .   இதனை உண்மை என நம்பிடவைக்க சில சதிகளையும் அரங்கேற்றி வருகின்றனர் . 

                  1894 ஆம் ஆண்டு மணிப்பூரில் கிருஸ்தவ மிஷனரிகள் மூலம் ஒரு பொய்யான கண்டுப்பிடிப்பை அரங்கற்றினார்கள் .மணிப்பூரில் காணாமல் போன யூத கொத்த்ரத்தில் ஒன்றாகிய மனாசே கோத்திரத்தார் அங்கு வாழ்ந்திடுவதாக கதைக் கட்டினர் . இதற்க்கு அவர்கள் சொல்லும் ஒரே காரணம் கீழ் கண்ட பாடல்தான் 
  
               நாங்கள் பஸ்கா பண்டிகை கொண்டாடவேண்டும்

 
              ஏனென்றால் நாங்கள் செங்கடலை கடந்து தரைக்கு வந்தபடியால்

              இரவிலே நெருப்புடனும்
              பகலிலே மேகத்துடனும் கடந்தோம்.
              எதிரிகள் எங்களை இரதங்களினாலே துரத்திக்கொண்டு வந்தார்கள்
            அவர்களை கடல் விழுங்கி விட்டது. அவர்கள் மீன்களுக்கு இரையாக்கப்பட்டார்கள்.
            நாங்கள் தாகமாக இருந்தபோது
             கன்மலையிலிருந்து எங்களுக்கு தண்ணீர் கிடைத்தது.
    
                 இதை மட்டும் வைத்து அவர்களை ஏமாற்ற முடியாது என்பதை தெரிந்துக்கொண்ட யூதர்கள் வேற்று வழியையும் செயல்படுத்தினர் . அதுதான் தீர்க்க தரிசனம் என்ற மோசடி வழி 
    
                1951 ஆம் ஆண்டு  பெந்தேகொஷ்தே மத போதகர் இட்சலா என்பவரை கொண்டு கீழ் கண்டவாறு சொல்ல சொல்லினர் . 


அது 
   
               என் இன மக்களே எனக்கு ஒரு தீர்க்க தரிசனம் கிடைத்தது அது என்னவென்றால்  அது நம்முடைய உண்மையான மதம் யூத மதமேயாகும் நாம் அனைவரும் ஆரோனின் வம்ச வழியினர் ( இஸ்ரவேலர்கள்) என்று கதைகட்டி மக்களை நம்பிட வைத்தனர் . அக்கணமே யூத  மதத்தில் 5000 பேர் இணைந்தனர் மேலும் அந்த இனத்தை சேர்ந்த பலரும் பல தவனைகளிலே மாற்றப்பட்டனர் . பின்னர் பெண் மனசே கோத்திரத்தில் 7200 பேர் இஸ்ரேலில் குடியமர்த்தப்பட்டனர் .

             இதற்க்கான செலவினங்களை கவனிக்கும் பொறுப்பை ஷாவை இஸ்ரேல் என்ற அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது .இந்திய ஆக்கிரமிப்பை உறுதி செய்ய இவைகள் மட்டும் போதாது என உணர்ந்த யூதர்கள் அந்த பகுதியில் அதாவது இரண்டாவது ஜெருசலத்தை உருவாக்க நினைக்கும் பகுதியில் இந்துக்கள் முஸ்லிம்கள் கிருஸ்தவர்கள் பழங்குடியினர் இவர்களின் வறுமையை பயன்படுத்தி மதமாற்றம் செய்துகொண்டிருக்கிறார்கள் .

             மதமாற்றங்களை செம்மையாக நிறைவேற்றிட இஸ்ரேலிருந்து யூத ராபிகள் இந்த இடங்களுக்கு அடிகடி வந்து செல்கிறார்கள். இந்த மதமாற்றங்கள் அனைத்தும் பணத்தை கொண்டே நடப்பதாக டெக்கான் குரோனிக்கில் ஆய்வு தெரிவிக்கிறது .     
                                                                                                                                                                                                -                                                                                                                                    தொடரும்- 
இன்ஷா அல்லாஹ் இந்த கட்டுரையின் தொடரை தொடர்ந்து எழுத உங்களின் ஊக்கம் தேவைப்படுகிறது .
                        

No comments:

Post a Comment