test

Wednesday, December 14, 2011

அமெரிக்கா முஸ்லிம் நாடுகளை குறி வைப்பது ஏன்?

                                                                                                      - அதிரை இக்பால்
  ஒரு பரவலான கருத்து நம்மிடையே வலம் வந்து கொண்டிருக்கிறது அது  அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் முஸ்லிம் நாடுளின் மீது  போர்தொடுப்பது  எண்ணெய் வளத்திற்க்காகத்தான் என்பதாகும் .

ஆனால் உண்மை  அப்படி அல்ல . வரலாறு அதை வேறு விதமாக நமக்கு கூறுகிறது . எண்ணெய் வளம் மட்டுமே காரணம் என்றால் சிலுவை போர்களே தேவைப்பட்டு இருக்காது .


உண்மை  என்னவென்றால் எண்ணெய்  வளங்களை  அவர்கள் கைப்பற்றுவதன் மூலம் முஸ்லிம் நாடுகளுக்கு எதிரான  போர்களை முன்னெடுத்து செல்வதற்கு அவர்களுக்கு பொருளாதார பலம் கிடைக்கிறது .

பின்னர் ஏன்தான் அவர்கள் முஸ்லிம் நாடுகளின் மீது தொடர் போரை நிகழ்த்துகிறார்கள் ?

அது

சோசலிசம் என்னும் பொதுவுடைமை சித்தாந்தம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் மக்கள் ஆதரவை பெருமளவில் பெற்றது  . ரஷ்யாவிலும் அதன் அண்டை நாடுகளிலும் கி.பி 1917  ஆம் ஆண்டு அதன் அரசு அமைக்கப்பட்டபோது  சர்வதேச அரங்கில் அது ஆதிக்கம் பெற்றது .
இந்த அரசுதான் பிற்காலத்தில் சோவியத் யூனியன் என்றழைக்கப்பட்டது .

சோவியத் யூனியன் வீழ்ச்சி அடையும் வரை அது சர்வதேச அரசியல் அரங்கில் ஆதிக்கம் செலுத்தி வந்தது . சோவியத் யூனியன் வீழ்ச்சியுற்றதும் மக்கள் பொது உடமை சித்தாந்தங்களை புறக்கணிக்க ஆரம்பித்தனர் .

இதன் விளைவாக முதலாளித்துவ சித்தாந்தம் தொடர்ந்து சர்வதேச அளவில் கொள்கைகளையும் முடிவுகளையும் மேற்கொள்ள போட்டியாக வேறு எந்த சித்தாந்தமும் இல்லை என ஆயிற்று . முதலாளித்துவ சித்தாந்தத்தின் தலைவனாக அமெரிக்க இருக்கிறது .

அது ஒவ்வொரு நாட்டிலும் தனது கொள்கைகளை திணிக்கிறது . அல்லது சில சாதிகளின்  மூலம் அரங்கேற்றுகிறது .

சோஷலிச கொள்கைகளில் வாழ்ந்த மக்கள் அது வீழ்ச்சியுற்றதும் அதனை முற்றிலுமாக கைவிட்டு வேறு பாதைக்கு திரும்பினர் . ஆனால் முஸ்லிம் நாடுகளில் கிலாபத்துக்கு கீழ் வாழ்ந்த முஸ்லிம்கள் கிலாபத் வீழ்ச்சியுற்றாலும் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக இன்னும் தொடர்து கொண்டுதான்  இருக்கிறார்கள் .

முதலாளித்துவ கோட்பாட்டை உலக மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற அமெரிக்காவின் திட்டமிட்ட நடவடிக்கைகளுக்கு இஸ்லாமிய நாடுகள் தவிர வேறு எங்கும் அவ்வளவு எதிர்ப்புகள் காணப்படவில்லை . ஏனென்றால் முதலாளித்துவ கோட்பாட்டை அமெரிக்க மக்கள் ஏற்றுக்கொண்டதை பின்பற்றி மேற்கு ஐரோப்பாவும் அதன் வழி நடக்கும் கனடா ,ஆஸ்த்ரேலியா , நியுசிலாந்து மற்றும் ரஷ்யாவும் கிழக்கு திசை நாடுகள் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட நாடுகள்,   பொது உடமை கோட்பாட்டை துறந்துவிட்டு  முதலாளித்துவ கோட்பாட்டை தங்களது கொள்கையாக மாற்றிகொண்ட நாடுகளும் அடங்கும் . இந்தநாடுகள் முதலாளித்துவ கோட்பாட்டை எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஏற்றுகொண்டார்கள் . மேலும் லத்தீன் அமெரிக்கா தூரக்கிழக்கு நாடுகள் தென் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவின் சில பழங்குடி இன நாடுகள் ஆகியவைகளுக்கு எந்த வித  சித்தாந்தமும் கிடையாது . முதலாளித்துவ கோட்பாட்டிற்கு அங்கு எந்த எதிர்ப்பும் வருவதற்கு வாய்ப்பே இல்லை .

ஆகவே சித்தாந்தே ரீதியாக இஸ்லாமிய சமூகமே முதலாளித்துவ கோட்பாட்டை ஏற்றுகொள்ளாத நாடுகளாக உள்ளன .இந்த சமூகம் தன் வசம் இஸ்லாம் என்ற உயரிய சித்தாந்தத்தை வைத்திருக்கிறது .

நாடோடி கூடங்களாக சரித்திரத்தின் மூலையில் நின்று கொண்டிருந்த அரபு இன மக்களை இஸ்லாம் எவ்வாறு பண்பு நிறைந்தவர்களாகவும் , தனித்தன்மை உடைய சமூகமாகவும் , உலகிற்கு சத்திய ஒளியை எடுத்துசென்றவர்களாகவும் உருவாக்கியதை என்பதை முதலாளித்துவ வாதிகள் நன்கு அறிவார்கள் . அந்த முஸ்லிம்களின் தலைமைத்துவம்  பலநூற்றாண்டுகள் கடந்து நின்றது . அவர்களது ஆட்சிகால்த்திலதான் நீதியும்  நேர்மையும் , பாதுகாப்பும் நல்ல பண்புகளும் செழித்து வளர்ந்தது .

எனவே முஸ்லிம் சமூகம் மறுமலர்ச்சி பெற்று இந்த  உலகில் மீண்டும் தலைமைத்துவம்  பெற்றுவிடும்  என அஞ்சியே முதலாளித்துவ வாதிகள் முஸ்லிம் நாடுகளை குறி வைத்து இயங்கி கொண்டு  இருக்கிறார்கள் .

மேலும் முஸ்லிம்களின் மீது காபிர்கள் ஆதிக்கம் செலுத்துவதை இஸ்லாம் தடுக்கிறது

                        " அல்லாஹ் காபிர்கள் விசுவாசிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டான் . (4 :141 )

எனவே  முஸ்லிம்களை முதலாளித்துவ கோட்பாட்டை ஏற்க செய்ய  வேண்டும் எனும் நோக்கத்திலேயே அவர்கள் முஸ்லிம் நாடுகளை குறிவைத்து தாக்குகிறார்கள் .




No comments:

Post a Comment