test

Tuesday, December 13, 2011

ஜனநாயகம் (?)

   - அதிரை இக்பால்                                                                                                        
 ஜனநாயகம் கீழ்கண்டவாறு வரையறுக்கப்படுகிறது 
  " மக்களுக்காக மக்காளால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி முறையை கொண்டு மக்களே நடத்தும் ஆட்சி "

 ஆனால் நிதர்சனத்தில் அது முற்றிலும் உண்மைக்கு  புறம்பானது . எந்த ஒரு முதலாளித்துவ நாட்டிலும் மக்களே மக்களை அட்சி செய்வது இல்லை . உண்மையில் மக்கள் சில செல்வாக்கு உள்ள (?)  மனிதர்களால் (முதலாளிகளால்) ஆளப்படுகிறார்கள்

முதலாளித்துவ வாதிகள் அமெரிக்காவையும் ,பிரபுக்கள் வழி வந்த மேட்டுக்குடியினர் இங்கிலாந்தையும் , ரிலையன்ஸ் அம்பானி ,டாட்டா ,பிர்லா, கிங் பிஷெர் விஜய் மல்லையாக்கள் , மற்றும் ஆதிக்க வெறி பிடித்த பார்ப்பன பண்டாரங்கள் இந்தியாவையும் ஜனநாயகம் என்ற பெயரில் ஆள்கிறார்கள் . இவர்களே இந்த நாடுகளில் சட்டம் இயற்றும் ஏக போக அதிகாரத்தை மறைமுகமாக கொண்டிருக்கிறார்கள் . இவர்களின் நலன் கருதியே சட்டங்களும் இயற்றபடுகின்றன .அமல்படுத்தப்படுகின்றன .இவர்களின் நலன் கருதியே அரசியல் நாடகங்களும் அரங்கேற்றப்படுகின்றன .

ஜனநாயகத்தில் நீதி  ,சமத்துவம் ,ஆட்சியாளர்களை விசாரணை செய்யும் அதிகாரம் எல்லாம் மக்களுக்கு இருக்கிறது என்பதெல்லாம் ஏட்டு சுரைக்காதான் .
உண்மை நிலைகளுக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது . அமெரிக்காவை எடுத்துகொண்டால் இந்த நாட்டில் சமத்துவம் நீதி  அரசை விசாரணை செய்யும் அதிகாரம் இவையெல்லாம் இனம் நிறம் மதம்  செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு குறப்பிட்ட மனிதர்கள் மட்டும்தான் வைத்திருக்கிறார்கள்  என்பது தெளிவான உண்மையாகும் . 

இந்தியாவை எடுத்துக்கொண்டால் பாபர் மசூதி தீர்ப்பே போதுமானது இங்கே நீதி சமத்துவம் ,அரசை கேள்விகேட்கும் அதிகாரம் அறவே இல்லை என்பதை விளக்க .
எந்த ஒரு ஆதாராமும் இல்லாத நிலையில் அவர்கள் ஒரு குறிப்பிட்ட ( பார்ப்பனர்கள் ) நலனுக்கு ஆத்தராவகவே தீர்ப்பை எழுதினர் . எந்த ஒரு குண்டு வெடிப்பு நிகழ்தாலும் எளிதாக முஸ்லிம்களை குற்றம் சுமத்தும் அரசியல் வாதிகள் , ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டபோது தனது சந்தேகத்தை பார்ப்பன தீவிராதிகள் மீது  சொன்ன குற்றத்துக்காக அந்துலே பட்டப்பாடு எல்லோர்க்கும் தெரிந்த ஒரு விடயமாகும் . ஆக இந்தியாவில் அரசை கேள்வி கேட்கும் உரிமை கண்டிப்பாக பார்ப்பனர்களுக்கு எதிராக இருக்கக்கூடாது .
ஜனநாயக ஆட்சி முறையின் முக்கியமான அம்சம் மனிதனை படைத்த இறைவன்தான் மனிதனுக்கு வழிக்காட்ட சட்டங்களை இயற்ற முடியும் என்பதற்கு மாற்றாக மனிதர்களே தங்கள் வாழ்வுக்குரிய சட்டங்களை இயற்றிகொள்ளலாம் என்பதாகும் .அதாவது சட்டம் இயற்றும் அதிகாரம் மனிதனை படைத்த இறைவனுக்கு இல்லை மாறாக மனிதனுக்கு உரியதாகும் என்ற கருத்து இதனுள் அடங்கி இருக்கிறது .இது கண்டிப்பாக இணை வைக்கும் செயல்தானே அன்றி வேறு இல்லை .

முஸ்லிம்களை பொறுத்த மட்டில் ஜனநாயகத்தை கடைபிடிப்பது என்பது இஸ்லாத்தின் அனைத்து அம்சங்களையும் நிராகரிக்கும் செயலாகும் . அநேக குர் ஆன் வசனங்கள் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் சட்டங்களை மட்டுமே அமல்படுத்த வேண்டும் என்பதையும் மற்ற அனைத்தையும் நிராகரிக்க வேண்டும் என்பதனையும் கட்டளை இடுகின்றன . மேலும் இந்த வசனங்களில் எந்த ஒரு மனிதன் அல்லாஹ்வின் சட்டங்களை ஏற்றுக்கொள்ளவில்லையோ அல்லது அதை அமல்படுத்தவில்லையோ அவனை நிராகரிக்கும் காபிர் என்றும் அநியாயக்காரன் என்றும் பாவி என்றும் கூறுகின்றன .

                                  " அல்லாஹ் வெளிப்படுத்தியதை கொண்டு எவர் ஆட்சி      செய்யவில்லையோ அவர் நிராகரித்த காபிர் ஆவார் " ( 5:44) 
  
                                  " மேலும் எவர் அல்லாஹ் வெளிப்படுத்தியதை  கொண்டு ஆட்சி  செய்யவில்லையோ அவர் அக்கிரமக்காரர் ஆவார் "(5:45)

                                 "  மேலும் எவர் அல்லாஹ்  வெளிப்படுத்தியதை கொண்டு ஆட்சி செய்யவில்லையோ அவர் வரம்பு மீறிய பாவியாவார் "(5:47)

  ஆகவே யாரெல்லாம் அல்லாஹ் வெளிப்படுத்திய சட்டங்களை கொண்டு ஆட்சி செய்யவில்லையோ அவர் அல்லாஹ்வின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை மறுத்தவர் ஆவார் .

1 comment:

துக்ளக் நியூஸ் குழுமம் said...

அருமையான கட்டுரை.

COPY & PASTE காலத்துல இருக்கிற நாம, சொல்ல வந்த கருத்தை சொல்லி அதற்க்கு இறைவசனத்தின் ஆதாரத்தை எடுத்து சொல்லிய விதம் அருமை.

பாராட்டுக்கள்.

*****துக்ளக் நியூஸ் குழுமம்*****

Post a Comment