test

Sunday, December 11, 2011

ஹிஜ்ரா காலண்டர் பின்பற்றுவதற்கு உகந்ததா ?- ஒரு அலசல்

                                                                                                                           - அதிரை இக்பால்

 ஒவ்வொரு சமுதாயமும் தங்களுக்கென்று அடையாளங்களையும் கலாச்சாரங்களையும் கொண்டுள்ளன . அந்த அடையாளங்களில் நாட்காட்டியும் ஒன்றாகும்.
ஒரு சமுதாயம் அல்லது ஒரு நாடு பிற சமுதாயங்களால்  அல்லது பிற நாட்டினரால் ஆக்கிரமிக்கப்படும்போது ஆக்கிரமித்த சமூகங்களின்  நாட்காட்டிகளை பின்பற்றியது வரலாற்று உண்மை

இதன்படி முஸ்லிம்கள் ஹிஜ்ரா நாட்காட்டியை பின்பற்றுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகிறது .ஹிஜ்ரா நாட்காட்டியை பின்பற்றுவது இஸ்லாமிய ஆளுமையின் சிறந்த அடையாளமாகும்


ஹிஜ்ரா காலண்டரை பின்பற்றியே ஆகவேண்டுமா?


ஹிஜ்ரா காலண்டர் என்பது சந்திரனின் ஓட்டத்தை  அடிப்படையாக கொண்டு
அமைக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த விசயமாகும் .


 அல்லாஹ் கூறுகின்றான் : நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பனிரெண்டு ஆகும் .வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளிலிருந்தே அல்லாஹ்வின் ஏட்டில் இது உள்ளது (9 : 36 )


மாதங்கள் எனுபோது அது சந்திரனின் ஓட்டத்தைகொண்டு அமைந்திட வேண்டும் என்பது அல்லாஹ்வின் ஏற்பாடு .


மு அத் பின்  ஜபல் (ரழி) ஸ அலபா பின் கன்மா (ரழி) ஆகிய இரு நபித்தோழர்களும் அண்ணல் நபி (ஸல்) அலைகிவசல்லம் அவர்களிடம்  "வானில் தோன்றும் பிறை மெல்லிய நூல் போல தோன்றி பிறகு வளர்ந்து பெரிதாகி முழுவட்டமாகிறது . பிறகு மெல்லக்குறைந்து முன்பு போல் (மெலிதாக) ஆகிவிடுகிறதே ஏன் அது ஒரே மாதிரியாக இருப்பதில்லை "  என்று  கேட்டனர்.

அப்போது திருக்குர் ஆன் வசனம் இறங்கிற்று . (நபியே ) பிறைகளை பற்றி உம்மிடம்  கேட்கின்றனர் . அவை மக்களுக்கும் (குறிப்பாக) ஹஜ்ஜிற்கும் காலம் காட்டி என நீர் கூறுவீராக ! (2 :189 )

இதன் அடிப்படையில் சந்திர நாட்காட்டி என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல  மாறாக உலக மக்கள் அனைவருக்கும் அல்லாஹ் வழங்கிய நாட்காட்டி ஆகும் . எனவே நாம் நாட்காட்டிகளை அதன் அடிப்படையில் அமைப்பது
அவசியமாகிறது .

சூரிய காலண்டர் குறைப்பாடுகளை உடையதா ?


சூரிய காலண்டர்கள் ஏறக்குறைய 700 வருடங்களாக நடைமுறையில் இருந்து வருகின்றது .

 மெசபடோமியா நாகரிகத்தின் காலத்தில் மார்ச் மாதம் 25 ஆம் நாளை வருடத்தின் தொடக்க நாளாக கொண்டாடி வந்தனர் .அவர்கள் பயன்படுத்திய காலண்டரில் பத்து மாதங்கள்தான் இருந்தன . அதில் ஜனவரியும் பிப்ரவரியும் இல்லை .

பிறகு ரோமர்களின் காலத்தில் அந்த இரண்டு மாதங்களையும் இணைத்தார்கள் அவை இரண்டும் கடவுள்களின் பெயர்கள் என்றார்கள் .எனவே அது பனிரெண்டு மாதங்கள் என்று ஆயிற்று .இந்த காலக்கட்டத்தில் பிப்ரவரி 29 நாட்களை கொண்டு இருந்தது .

ரோமபுரி மன்னர் சீசர் ஜூளியோசின் வெற்றிக்குப்பின்  அவர் பனிரெண்டு  மாதங்களின் ஒன்றுக்கு தனது பெயரை சூட்ட எண்ணினார் .ஏழாவது மாதத்திற்கு ஜூலை என்று தனது பெயரை சூட்டினார் .

அதற்க்கு பிறகு ரோமபுரி மன்னராக பதவி ஏற்ற ஜூளியோசின் சகலை சீசர் ஆகஸ்ட் என்பவர் தனது பெயரும் ஒரு மாதமாக இடம்பெயரவேண்டும் என எண்ணினார் எனவே எட்டாவது மாதத்திற்கு ஆகஸ்ட் என்று பெயர் சூட்டினார் .
ஆனால் அன்று ஆகஸ்ட் மாதம் ஜூலையை விட ஒருநாள் குறைவாக இருந்தது . தன சகலையை விட தன் மாதம் குறைவாக இருப்பதா என பிப்ரவரியில் இருந்து ஒரு நாளை கடன் வாங்கி ஆகஸ்டும் முப்பது நாள் ஆனது . இதனால் பிரவிரி 28 நாளாக குறைந்து போனது .


சூரிய ஓட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கிருஸ்தவ காலண்டர் (தற்போது பின்பற்றப்படும் காலண்டர் ) அந்த கணக்கீட்டின் படியாவது சரியாக உள்ளதா என்றால் இல்லை .


வருட நாட்கள் 365 நாட்களாக உள்ளது . ஆனால் ஒரு வருட சூரிய ஓட்டத்திற்கு 365 .25  நாட்கள் தேவைப்படுகிறது இதனால் வருடத்திற்கு கால் பகுதி நாள் (6 மணி நேரம்  ) வித்தியாசத்தில் இந்த காலண்டர் தாமதமாக உள்ளது .


இவ்வாறு தொடர்ந்து நான்கு வருடங்கள் ஆகும் போது முழுமையாக ஒரு நாள் வித்தியாசம் ஏற்பட்டுவிடுகிறது . இந்த வித்தியாசத்தை நீக்குவதற்காகவே நான்கு வருடத்திற்கு ஒரு முறை லீப் வருடம் என்ற ஒன்றை ஏற்படுத்தி அந்த வருடத்தை 366  நாட்களை கொண்டதாக ஆக்கி விடுகின்றனர் .இதனால்தான் லீப் வருடத்தின் பிப்ரவரி மாதத்திற்கு 29 நாட்கள் .
இதோடும் பிரச்சினை ஓயவில்லை ஒரு நாளை அதிகரித்த பின்பும் சில மில்லி செகண்டுகள் மீதம் இருக்கவே அவை பெருகி 120  வருடங்களில் ஒரு நாளின் அளவை அடைந்து விடுகிறது .

இதன் விளைவாக உருவெடுத்ததே  y2k என்ற பிரச்சினை . அதை சரிக்கட்ட மீண்டும் பிரவரியை முப்பதாகக முயன்றனர் . செயற்கை கோள் மற்றும் கணினியில் ஏற்படும் பிரச்சினையால் அது கைவிடப்பட்டது   .


எனவே எப்பொழுதும்   சூரிய காலண்டர் ஒரு பிரச்சினையாகத்தான்   உள்ளது


ஹிஜ்ரா காலண்டர்  குறைப்பாடற்றது 


மாத நாட்கள் 30  ஆகவும் 29 ஆகவும் கொண்ட சந்திர காலண்டர் வருட நாட்களாக 354 -355 நாட்களை கொண்டதாக துல்லியமாக அமைந்துள்ளது . இந்த காலண்டர் மனித திருத்தங்களுக்கு அப்பாற்பட்டது .


சந்திரனை தொடர்ந்து பார்ப்பவர்களால் அதன் தேதியை துல்லியமாக சொல்லிவிட முடியும் .


இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் நோன்பு, ஜக்காத், ஹஜ் , ஆகியவை சந்திரனை அதாவது ஹிஜ்ரா காலண்டரை அடிப்படையாக அமைந்துள்ளது .

எனவே சந்திரக்காலண்டரை  பின்பற்றுவது அல்லாஹ்வின் கட்டளையாக உள்ளது .
 " அல்குரான்  ரமலான் மாதத்தில்தான் அருளப்பட்டது ... அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும் ." (2 : 185 )


ஹஜ் (உரிய காலம் ) அறியப்பட்ட மாதங்களாகும் .அதில் ஹஜ்ஜை தம் மீது விதியாக்கி கொண்டவர் ஹஜ்ஜின்போது உடலுறவு கொள்வதோ , பாவம் செய்வதோ , வீண் தர்க்கம் புரிவதோ கூடாது (2 :197 )  போன்ற குர் ஆன் வசனங்கள் மூலமும்


"ஒருவர் ஒருபொருளை அடைந்து ஒரு வருடம் ஆகிவிட்டால் அதன் மீது ஜக்காத் கடமையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "(அபூதாவூத் ,திர்மிதி )  போன்ற ஹதீஸ்களின் மூலமும் ஹிஜ்ர காலண்டரி பின்பற்றுவது அல்லாஹ்வின் கட்டளை என்பதி அறியலாம் .


இறைவன் மனிதனுக்காக அவர்களின் நலன்களுக்காக வகுத்தளித்த விதிகளையும் நெறிகளையும் மீறும் போதெல்லாம் மனிதன் தோல்வி அடைந்திருக்கிறான் . தனக்கென ஒரு நாட்காட்டியை தேடிகொல்வதிலும் மனிதன் தோல்வியை தழுவிவிட்டான் .


இந்த விஷயம் என்றில்லை எல்லாவற்றிலும் இறைவன் வழியை  நோக்கி திரும்புவதே மனிதனை வெற்றி பெற வைத்திடும் .


 ஆதாரம் ( சமுதாய ஒற்றுமை , வைகறை வெளிச்சம் , சமரசம் )
No comments:

Post a Comment