test

Saturday, December 10, 2011

இஸ்ரேலுக்கு எதிரான துருக்கியின் பிரகடனம்-இஸ்ரேலின் ரவுடித்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா ?



 மத்திய தரை கடலில் இஸ்ரேல் ஒரு ரவுடி ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது . இதனால் கடல் வழியாக  பாலஸ்தீன மக்களுக்கு எந்த நிவாரண பொருளையும் அனுப்ப இயலுவதில்லை .

சர்வதேச நிவாரண குழுக்கள் பல மருந்துகளையும் அடிப்படை  ஜீவாதாரப் பொருள்களையும் கப்பல்களில் கொண்டு சென்றிருக்கின்றன அந்த கப்பல்களில் மிகவும் பிரசித்திப் பெற்றது "காசா புடோடில்லா"  என்ற கப்பலாகும் . இதில் உலக நாடுகளின் பிரதிநிதிகள் பயணம் செய்தார்கள் .


இந்த கப்பல் காசா பகுதியை நெருங்கி கொடிருந்தபோது இஸ்ரேலிய ராணுவம் தாக்கி அழித்துவிட்டது . அதில் துருக்கியில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய குடும்பத்தை சார்ந்த ஒருவர் உட்பட ஒன்பது பேர் கொலை செய்யப்பட்டார்கள் .

அதே போல் பின்னர் அனுப்பப்பட்ட கப்பல்களையும் அவை கொண்டு சென்ற நிவாரண பொருள்களையும் இஸ்ரேல் கெடுபிடிகளுக்கு  உள்ளாக்கியது . இதனால் காசா பகுதி மக்கள் அடிப்படை தேவைகளுக்கு அல்லாடிகொண்டிருந்தார்கள் .

இஸ்ரேலின் இந்த கெடுபிடிகளுக்கு  முற்றுப்புள்ளி வைக்க துருக்கி முடிவு செய்துள்ளது . இனி பாலஸ்த்தீனில் காசா நோக்கி செல்லும் கப்பல்களுக்கு துருக்கியின் கப்பல் படை பாதுகாப்பளிக்கும் என துருக்கி பிரகடனம் செய்துள்ளது .

 அதே போல் மத்திய தரை கடல் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திவரும் ரவுடித்தனங்களுக்கும் துருக்கி முடிவு கட்டிட உள்ளது .

அதே போல் சைப்ரஸ் நாட்டுக்கும்  இஸ்ரேலுக்கும் நடுவே உள்ள கடல் பகுதியையும் இனி துருக்கி கண்காணிக்க உள்ளது . இந்த பகுதியில்தான் இஸ்ரேலும் சைப்ரசும் கடலில் என்னை கண்டுபிடிக்கும் முயற்சியில் தங்களை ஈடுப்படுத்தி வருகின்றன .

இந்த பகுதிகளில் இனி இஸ்ரேல் தன் நாச வேலைகளை நிறைவேற்றிட முடியாது .

அடுத்து துருக்கியின் பிரதமர் தையூப் என்ரோகன் காசா பகுதிக்கு பயணம் ஒன்றை மேற்கொள்ள இருக்கின்றார் .

அந்த பயணம் சரியான தருணம் பார்த்து அமையும் என நம்பப்படுகிறது . அந்தப்பயணம் வரலாற்றை திருப்பி போடும் .

  நன்றி : வைகறை வெளிச்சம் (மாத இதழ் )


No comments:

Post a Comment