test

Wednesday, December 7, 2011

அணு மின் நிலையத்தை எதிர்த்து பிரான்சில் போராட்டம்




பிரான்ஸ் நாட்டில் சுற்றுச்சூழல் ஆதரவாளர்கள் பாரீஸ் நகரத்துக்கு தென்கிழக்கே 95 கி.மீ தொலைவில் உள்ள கோஜண்ட் சுர் செய்னே(Nogent-sur-Seine)என்ற அணு மின் நிலையத்திற்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர்

.
அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு பலமற்று இருப்பதை உணர்த்தவே உள்ளே நுழைந்து போராடியதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இவ்வாறு அணு மின் சக்தி நிலையத்துக்குள் அத்து மீறி நுழைந்த ஒன்பது பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.


அணு ஆராய்ச்சி நிபுணரான சோபியா மஜ்னோனி கூறுகையில், 15 நிமிடத்தில் போராட்டக்காரர்கள் அணு சக்தி நிலையத்தின் மையப்பகுதியை அடைந்து விட்டனர். அங்கு தான் அணு சக்தி உற்பத்திக்கான எரிபொருளும், அணு சக்தி உற்பத்தி மையமும் உள்ளன. அந்த இடம் வரை எளிதாக மக்கள் சென்றதால் அணு சக்தி நிலையத்தின் பாதுகாப்பு பலமானதாக இல்லை என்பது எளிதாக புரிந்துவிட்டது என்றார்.


உலகிலேயே பிரான்ஸ் நாட்டில் அதிகமான அணு சக்தி நிலையங்கள் உள்ளன. ஜப்பானில் புகுஷிமா அணு மின் நிலைய விபத்திற்கு பின் ஏற்பட்டுள்ள அச்சத்தாலும், எதிர்ப்பாலும் ஜேர்மனி எதிர்வரும் 2022ம் ஆண்டுக்குள் தமது நாட்டின் அனைத்து அணு சக்தி நிலையங்களையும் மூடி விடப் போவதாக அறிவித்துள்ளது.


அடுத்த ஆண்டு நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் சோசலிசக் கட்சியின் தலைவராக இருக்கும் ஃபிராங்கோய்ஸ் ஹோலாண்டே வெற்றி பெற்றால் எதிர்வரும் 2025ம் ஆண்டுக்குள் 24 அணு மின் நிலையங்களை மூடப்போவதாக அறிவித்துள்ளார். இந்த எண்ணிக்கை மொத்த அணு மின் நிலையத்தில் ஜம்பது சதவீதம் ஆகும்.

No comments:

Post a Comment