test

Tuesday, March 1, 2011

தொடரும் மனு(அ)நீதி தீர்ப்புகள்


            நீதி மன்றங்கள் அவாள்களின் கோட்டைகளாகிவிட்டன. அதில்  அவர்கள் அமைக்கத்துடிக்கும் இந்து ராஷ்டிராவின் சட்டங்களிலே தீர்ப்பு வழங்கி  பரீட்சித்து பார்க்கப்படுகிறது .வழக்கம் போலவே முஸ்லிம்கள் அதனை ஒருநாள் செய்தியாக நினைத்து மறந்து போவார்கள் .
 
 
              கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் நீண்ட ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வெளியாகியுள்ளது அந்த தீர்ப்புவழக்கம் போல இந்துத்துவ தீர்ப்பேதான்  .இனி இந்திய நீதித்துறைகளில் நீதியை எதிர்ப்பார்க்க 
முடியாது என்றுஅடித்துசொல்கின்ற மற்றுமொரு மனுதர்ம தீர்ப்பு .
 
                    
        தடய அறிவியல் சோதனையின் மூலம் அது வெளியிலிருந்து தீ வைத்திருக்க முடியாது . மேலும் உள்ளே இருந்துதான் முஸ்லிம்கள் தீ வைத்தார்களா  என்றாலும் அதுமுடியாதக்காரியம் ஏனென்றால் இரயில் பெட்டி முழுவதும்
 இந்துபயங்கரவாதிகளே நிரம்பி இருந்தனர்
     
    நிலைமை இவ்வாறு இருக்க 31  அப்பாவி முஸ்லிம்களை குற்றவாளிகள் என்று அவாள் மன்றம் தீர்ப்பளித்துள்ளது .மேலும் இத்தனை நாள் முதன்மை குற்றவாளிகளாக ஊடகங்களின் மூலம்சித்தரிக்கப்பட்ட   அப்பாவிகளான   உமர்ஜி,கண் தெரியாத சிறுவன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதன் மூலமும் மற்ற அப்பாவிகளை விடுதலை செய்வதன் மூலமும் முஸ்லிம்கள்தான் கோத்ரா இரயிலை எரித்தார்கள் என பொய்யாக  நிறுவி இருக்கிறார்கள் .
 
                  குஜராத் கலவரத்திலே ஈடுப்பட்டவர்கள் வாக்குமூலங்களை தெஹெல்கா மூலம் வெளிக்கொண்டு வந்தும் அதனை ஆதாரமாக நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை .ஆனால் எந்த ஒரு ஆதாரமும் இன்றி கோத்ரா ரயில் எரிப்பு வழ்சக்கில் முஸ்லிம்களுக்கு தண்டனை அறிவிக்கபட்டிருக்கிறது.
 
              ஏன் ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொலை அவழக்கில் தாராசிங்கின் செயலை அரிதுனும் அரிதான செயல் என வருணித்து  மரணத்தண்டனை எல்லாம் கொடுக்கமுடியாது என சொன்ன நீதிமன்றம் அப்பாவிகள் 11பேருக்கு மரணத்தண்டனை அறிவித்து இருக்கிறது . மேலும் இருபது பேருக்கு ஆயள் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்துள்ளது . மேலும் 63  பேரை குற்றமற்றவர்கள் என தீர்ப்பு வழங்கியுள்ளது .
 
           இந்துத்துவ தீர்ப்புகள் தொடர்ந்துக்கொண்டிருக்கும்  நிலையில் முஸ்லிம்களும் ஏனைய சிறுபான்மையினரும் என்ன செய்யபோகிறார்கள் .
       

No comments:

Post a Comment