test

Wednesday, February 2, 2011

எகிப்தில் இஸ்லாமிய எழுச்சி

     
                                                    எகிப்தின் மக்கள் திரள்!!

                                 


                             துநீசியாவைத் தொடர்ந்து  எகிப்த்திலும் மக்கள் அமெரிக்க இஸ்ரேல் ஆதரவாளரான ஹோஸ்னி முபாரக்கிற்கு  எதிராக போராடி வருகின்றனர்  . முப்பது ஆண்டுக்களாக அதிபரான அவர் தீவிர அமெரிக்க ஆதரவாளர். இந்த மக்கள் போராட்டத்தை ஈரான் துருக்கி உள்ளிட்ட நாடுகள் ஆதரித்த நிலையில் அரபு  நாடுகள்மௌனம்காக்கின்றன.  

.                                                 
           அமெரிக்காவும் இஸ்ரேலும் சற்று கலங்கித்தான் போயிருக்கின்றனர் . நாங்கள் ஜனநாயகத்தை ஈராக் ,ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் மீட்க போகிறோம் என்று கூறி அந்நாட்டு மக்களின் உயிர்களை அவர்களின் உடம்புகளிலிருந்து மீட்டுக்கொண்டிருக்கும் அமெரிக்கா எங்கே  ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி போய்விட்டால் முஸ்லிம் சகோரத்துவம் அமைப்பினர் ஆட்சிக்கு வந்துவிடுவார்களோ என்ற பீதியில் ஊடகங்களுஅந்நாட்டு எதிர் கட்சி  தலைவரை அதிபர்ராக்க கீழறுப்பு வேலைகளில் ஈடுப்பட்டுள்ளன .
       
                  பாலஸ்தீனத்தில் ஹமாசின் போராட்டம் நெருக்கடிக்கு உள்ளான நிலையில் எகிப்தில் ஏற்பட போகும் ஆட்சிமாற்றம் மிகுந்த முக்கியத்துவத்தை  பெறுகிறது . ஒருவேளை முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினர் ஆட்சிக்கு வந்தால் இஸ்ரேலின் இருப்பு கேள்விக்குள்ளாகிவிடும்  என்பது இஸ்ரேல் பிரதமரின் அவசரமான முபாரக்கிற்கு ஆதரவான அறிக்கையிலேயே தெரிகிறது . மேலும் கிலாபாத்தை நிலைநாட்ட போராடும் முஸ்லிம்களுக்கு அது ஒரு உத்வேகமாக அமைந்திடும் . அதுனாலேய உலக நாடுகள் இந்த விசயத்தில் மௌனம் காக்கின்றன .
                   
                      இஸ்ரேலின் இருப்பே அதனை சுற்றயுள்ள நாடுகளின் அதிபர்கள் அமெரிக்க அடிமைகளாக இருப்பதை பொறுத்துதான். அதனாலேயே இராக் நிர்மூலமக்கபட்டது . எகிப்தில் அமெரிக்க கைபொம்மை தலைவர்களால் மக்களின் இஸ்ரேலுக்கு எதிரான போற்குனங்கள் ஒடுக்கப்பட்டு வந்தது . அறிவியலில் குறிப்பாக அணு சக்த்தியில் வேகமாக முன்னேறி வரும் ஈரானையும் அழிக்க சதிகளும் பின்னப்பட்டுவிட்டன .

                    இந்நிலையில் எகிப்தின் ஆட்சிமாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது . அங்கு முஸ்லிம் சகோதரத்துவம் அமைப்பினர் ஆட்சிக்கு வந்தால் அது முஸ்லிம்களுக்கு அது முதல் வெற்றியாக அமையும். ஏகாதிபத்திய பாசிச அரசுகளுக்கு அது சாவுமணியாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை

No comments:

Post a Comment