test

Saturday, January 22, 2011

தொடரும் இந்துத்துவ தீர்ப்புகள் .....

                          எதிர்ப்பார்த்தது போலவே உச்ச நீதி  மன்றம் ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொலை வழக்கில் தாராசிங்கிற்கு மரண தண்டனையை நிராகரித்துள்ளது. மேலும், 11பஜ்ரங்தள் பயங்கரவாதிகளின்   விடுதலையையும் உறுதி செய்துள்ளது

                                 பாதிரியார் ஸ்டெயின்சும் அவரது இரு குழந்தைகளையும் உயிரோடு எரித்து கொன்றான் பாசிச பயங்கரவாதி தாராசிங் . அவனுக்கு மரணத் தண்டனையும் அவன் கூட்டாளிகளுக்கு ஆயள் தண்டனையும் என்று 2005 ல்   சி.பி.ஐ.  நீதிமன்றம் தீர்பளித்தது .மேலும்   பாதிரியார் எரிக்கப்பட்ட சம்பவம் அரிதிலும் அரிதானதொரு சம்பவம் என்பதால்  மரணத்தண்டனை எல்லாம் விதிக்க முடியாது என்று  கூறி அதனை ஆயள் தண்டனையாக குறைத்துவிட்டது . இதன் முலம் தனது இந்துத்துவ தீர்ப்பை வழங்கி இருக்கிறது . சங்கப் பரிவாரங்களுடன் தாராசிங்கிற்கு உள்ள தொடர்புகள் குறித்து ஆதாரங்கள் நீதிமன்றத்தின் முன்பு வைக்கப்பட்டன. ஆனால் இந்த படுகொலையில் எந்த அமைப்புக்கும் தொடர் பில்லையென்று கூறியது சி.பி.ஐ. நீதிமன்றம்.

                             இந்த விளக்கங்களுக்குப் பொருத்தமானதொரு தீர்ப்பாக தாராசிங்கின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தும் 11 பேரை விடுதலை செய்தும் 2005இல் தீர்ப்பு வழங்கியது ஒரிசா உயர்நீதிமன்றம். பாதிரியாரைக் கொலை செய்யும் வகையில் தாராசிங் தாக்கியதற்கு ஆதாரமில்லை என்று வேறு உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

                              2005ல் இப்படியென்றால், 2010ல்உச்ச நீதிமன்றம் இன்னும் ஒரு படி மேலே சென்று, மத மாற்றம்தான் இந்தப் படுகொலைக்குக் காரணம் என்ற அரியதொரு ஆர் எஸ் எஸ் கண்டுபிடிப்பை மக்களுக்கு வழங்கியுள்ளது.

                             தாராசிங் திட்டமிட்டு படுகொலைகள் செய்கிறவன் என்பதும், ஆர் எஸ் எஸ்-பஜ்ரங்தள்ளின் தலைவன் என்பதும் மறுக்க இயலாத அளவு நிருபிக்கப்பட்டுள்ள போதும் அவற்றை நீதிமன்றம் ஏற்கவில்லை எனவே அவனுக்கு ஆயுள் தண்டனை. அதே நேரத்தில் குற்றசட்ட்பப்ட்டவர் முஸ்லிம்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களின்மீது உள்ள சந்தேகத்தின் அடிபடையேலேயே தண்டனை விதிக்கபடுகிறது .

                             இதற்க்கு எடுத்துக்காட்டாக கோவை குண்டுவெடிப்பு வழக்கு , பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுக்கு தூக்குத்தண்டனை . இதில் அப்சல் குருவுக்கு எதிரான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் இது மக்களின் கூட்டு மனசாட்சியை திருப்தி படுத்தவே என்று மழுப்பல் வேறு . எந்த மக்களை திருப்தி படுத்த என்பது எல்லாருக்கும் தெரிந்த விடயம்

                                இந்துத்துவ தீர்ப்புகள் தொடரும் நிலையில் தங்களை ஜனநாயக வாதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிபவர்கள் தொடர்ந்து மௌனம் காப்பது மூலம் அவர்களின் போலி ஜனநாயக வேடம் அம்பலப்பட்டு நிற்கிறது . அவர்களின் சந்தர்ப்ப வாதம் பல்லிளிக்கிறது.

                            இது தொடராமல் இருக்க வேண்டுமானால் சிறுபான்மையினரும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களும் ஓரணியில் திரண்டு  போராட முன்வர வேண்டும் .

No comments:

Post a Comment