test

Saturday, January 8, 2011

தீவிரவாதத்தின் உண்மைமுகம் . . .

               பல நாள் திருடன் ஒரு நாள் அகபடுவான்   என்பது பழமொழி  இது மற்ற விசயங்களில் எப்படியோ ஆனால் ஆர் .ஆர். எஸ்  என்ற பார்ப்பணீய பயங்கரவாத இயக்கத்தின் விசயத்தில் பல நாள் திருடன் பல நாள் அகபடுவான் என்றாகிவிட்டது . 

             அன்றொரு நாள் தன கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொண்டு காந்தியடிகளை சுட்டுக்கொன்றான் பார்ப்பணீய தீவிரவாதி கோட்சே . இதன் நோக்கம்  இந்து முஸ்லிம் கலவரங்களை  ஏற்படுத்துவது மூலம் அவர்களின் கனவான இந்து ராஷ்டிராவை அமைப்பதுதான் . ஆனால் மாட்டிக்கொண்டு அம்பலப்பட்டு போனான் .

            இன்று  ஆங்காங்கே நிகழ்த்தப்பட்ட தீவிரவாத செயல்கள் ஆர்.எஸ்.எஸ்  என்ற பார்ப்பண தீவிரவாத அமைப்பினால் முஸ்லிம்களின் மீது பழி போடும்  விதமாக திட்டமிட்டு நிகழ்தபெற்றது என்ன்ற உண்மை வெட்ட வெளிச்சமாகிவிட்டது .

            இது போன்ற திட்டங்கள் அவர்களுக்கு நிறையவே பயனளித்தது எதுவரைஎன்றல் பல குண்டு வெடிப்புகளில் கொல்லப்படுவது முஸ்லிம்களே என்றாலும் பழியும் முஸ்லிம்களின் மீதே போடபப்பட்டது .அதனை உண்மையாக்கிட உளவுத்துறையும் ஊடகங்களும் வரிந்துக்கட்டிக்கொண்டு செயல்பட்டன .
           இதே போல்தான்  மாலிகான் குண்டுவெடிப்புகளின் போதும் முஸ்லிம்களே கொல்லப்பட்டனர் .முஸ்லிம்களே சிறையிலடைக்கப்பட்டனர். ஆனால் ஹேமந்த் கர்கரே என்ற நேர்மையான போலீஸ் அதிகாரியின்  புலனாய்வுக்குபின் எல்லாமே தலைகீழாய் மாறிப்போனது . நாடெங்கிலும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியவர்கள் முஸ்லிம்களல்ல என்பது தெளிவானது. இதனையெல்லாம்  நிகழ்த்தியவர்கள் பார்ப்பண தீவிரவாத அமைபினர்தனர்தாம் என்ற உண்மையும் வெட்டவெளிச்சமாகியது . இதனை சுவாமி அசீமான்ந்த் என்ற தீவிரவாதி ஒப்புக்கொண்டான் . இதுமட்டுமல்லாது , மாலிகான் ,மக்கா மஸ்ஜித் , அஜ்மீர் தர்கா , சம்ஜ்யுக்தா ரயில் குண்டுவேடிபுகளையும் இவன் ,ஆர் .எஸ் .எஸ் தேசிய செயலர் இந்த்த்ரேஷ் குப்தா ,சுனில் ஜோஷி மற்றும் அபினவ் பாரத் என்ற இன்னொரு தீவிரவாத அமைப்பை சேர்ந்த ப்ரங்க்யா தாகூர் , ராணுவ அதிகாரி கர்னல் ப்ரூஹித் , தயானந்த் பாண்டே  உள்ளிட்டோர் செய்ததாக ஒப்புக்கொண்டான் .
             உடனே கதி கலங்கி போன பார்ப்பணீய  பயங்கரவாதிகள் குண்டு வைபவர்கள் முஸ்லிம்கள்தாம் என்ற பொய்யை  மீண்டும்  பரப்பிட ஒரு குண்டு வெடிப்பை நிகழ்த்தினார்கள் .அதுதான் கோவா குண்டுவெடிப்பு . இதனை நிகழ்த்தியவர்கள் சனாதன் சாஸ்தா என்ற இன்னொரு இந்து  தீவிரவாத  அமைப்பு .அவர்கள் இதனை செய்தவர்கள் முஸ்லிம்கள்தான் என நம்பவைக்க அதனை தீபாவளி அன்று நிகழ்த்தினார்கள் . மேலும் அதன் அருகில் ஒரு பையை வைத்தார்கள். அந்த பையில் கான் மார்க்கெட் என்று உருது மொழியில் எழுதி இருந்தது . பையினுள் அத்தர் ஒன்று இருந்தது .ஆனால் அவர்களுக்கு கெட்ட காலம்  அம்பலப்பட்டுப்போனார்கள் .

              ஆனால் உண்மைகள் எவ்வளவுதான் வெளியானாலும் இந்து தீவிரவாத அமைப்பை குற்றம் சாட்டவோ தடை செய்யவோ அரசு முயல்வது கூட இல்லை .
             சிலநாட்களாக குண்டுவெடிப்பு நிகழாமல் இருந்த நிலையில் ,சமீபத்தில் நிகழ்ந்த வாரன்னாசி குண்டுவெடிப்பில் இந்தியன் முஜாஹிதீன் என்ற கற்பனை அமைப்பை குற்றம் சாட்டுவதன் மூலம் முஸ்லிம்களின் மீது பழி போடுவது   மீண்டும் ஆரம்பமாகிவிட்டது .
            இதற்க்கு காரணம் ஐ பி  என்ற உளவுத்துறையில் பார்ப்பணர்கள் ஆதிக்கமே என்று கூறுகின்றனர் நடுநிலையாளர்கள் .எனவே ஐ பி யை கலைத்துவிட்டு அது செய்த விசாரணைகளை மறு ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் .அப்பொழுதுதான் இது வரைக்கும் நிகழ்ந்த தீவிரவாதத்தின் உண்மை முகம் வெளிப்படும்.

1 comment:

Anonymous said...

நல்ல முயற்சி இன்னும் நிறைய ஆதாரங்களை இடம்பெற செய்யவும்
அது இந்த்ரேஷ் குப்தா அல்ல இந்த்ரேஷ் குமார்

Post a Comment